கோடையில் பலன் தரும் எள் சாகுபடி

 • எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது.
 • தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் எள் சாகுபடி செய்ய முடியும். எள் அடுமனை (பேக்கரி) பொருட்கள் தயாரிப்பில் வாசனை மற்றும் அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 • ஒரு ஏக்கருக்கு எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைத்தால் ஒரு கிலோ விதை போதுமானதாக இருக்கும்.
 • மதுரையைச் சேர்ந்த எ.எஸ்.தர்மராஜன் விவசாயிகள் விவசாயிகளின் தந்தை என்று சொல்வார்கள். தர்மராஜன் பசுமைக்குடில்களில் என்ன பயிர் சாகுபடி செய்வது என்பது பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறி வருகிறார்.
 • நிலத்திற்கு கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழுவுரம், யூரியா 31 கிலோ, சூப்பர் 56 கிலோ இட வேண்டும்.
 • சாகுபடி நிலம் ரவை உப்புமா பதத்தில் இருக்கும்போது எள் விதைக்க வேண்டும்.
 • ஆனால் ஏர் மாடுகளின் குளம்புகளில் அல்லது கலப்பையில் மண் ஒட்டக் கூடாது.
 • எள் விதையினை விதைத்த பிறகு நிலத்தில் முள் செடி அல்லது படல் கொண்டு இழுத்து விதையை பூமியில் அழுத்தும்படி செய்து மேல் மண் மூடும்படி செய்ய வேண்டும்.
 • நிலத்தை கடைசி உழவு செய்யும்போது மக்கிய தொழு உரம் 5 டன் அளவு இடுவது அவசியம்.
 • இறவை பயிருக்கு அடியுரமாக யூரியா 30 கிலோ மேலுரமாக விதைத்த 20-25 நாளில் 8 கிலோ யூரியாவும் 30 -35 நாளில் 7 கிலோ யூரியாவும் இட வேண்டும்.
 • ஏக்கருக்கு 15 கிலோ மாங்கனீஸ் சல்பேட் இட வேண்டும்.
 • எள் செடியில் “”எக்கடையான்” சாற்றினை உறிஞ்சி விடுகின்றது. ஒருவித வைரஸ் நோய் வரும். உடனே அதை விஞ்ஞானிகளின் சிபாரிசினை கேட்டு ஆவண செய்ய வேண்டும்.
 • இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு சமப்படுத்தி விட வேண்டும்.
 • விதையின் மூலம் பரவும் வாடல், இலைப்புள்ளி நோய்களைத் தடுக்க இரண்டு கிலோ விதையுடன் 4 கிராம் மருந்தை கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இது மாதிரியான செயல்களை பூஞ்சாள வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

அறுவடை :

 • செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள காயில் உள்ள விதைகள் கருப்பாக வந்தால் உடனே அறுவடை செய்ய வேண்டும்.
 • இது சமயம் காய்கள் வெடிக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டும்
 • . இதைத் தடுக்க செடிகளை அறுவடை செய்து அம்பாரம் போட வேண்டும்.
 • செடிகளை தலைகீழாக மூன்று நாட்களுக்கு அம்பாரத்தில் வைக்க வேண்டும்.
 • பிறகு அம்பாரத்தை பிரித்து செடிகளை உலர்த்தி காய்களை வெடிக்க விட வேண்டும். செடிகளைத் தட்டி எள்ளினை எடுக்கலாம்.

மகசூல் :

 • ஏக்கரில் 350 கிலோவிற்கு குறைவில்லாமல் மகசூல் பெறலாம்.
 • இந்த மகசூலினை 90 நாட்களில் பெறலாம்.
 • இந்த விவரங்களை தர்மராஜன் மனப்பாடமாக எள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விவரமாக சொல்லி வருகிறார்.

பாசனம் :

 • எள்ளுக்கு அதிக நீர் தேவையில்லை. அஞ்சிலே ஒரு தண்ணீர், பிஞ்சிலே ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
 • எள் விவசாயிகள் 90 நாட்களில் கணிசமான அளவு லாபம் எடுக்கின்றனர்.

எஸ்.எஸ்.நாகராஜன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *