இப்போது உளுந்துக்கு அடுத்தப்படியாக எள் பயிரிடப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் சித்திரை மாதத்தில் எள் பயிரிட்டால் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏதுவாக அமையும்.
- எள்ளுக்கு தண்ணீர் அதிகாளவு பிடிக்காது.
- களையும் ஒரு முறை எடுத்தால் போதும். அதுவும் களைக்கொல்லி போட்டுவிட்டால் களை எடுக்க வேண்டியதில்லை.
- எள் பயிர் 2 இலைவிட்டசில நாட்களில் நுனியை கிள்ளி விட்டால் அதிக கிளை வெடித்து காய்கள் அதிகளவில் பிடிக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும்.
- மேலும் எள் செடி நெருக்கமாக இருந்தால் அவற்றை களைத்து விட வேண்டும்.
- தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.
- பயிரிட்ட 90 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.
- அறுவடை செய்த பயிர்களை போராக குவித்து ஒர் இடத்தில் வைக்க வேண்டும்.
- அவைகள் நன்கு புழுங்கிய பின்னர் வெயிலில் உலர்த்தினால் விதைகள் கொட்டும்.
- பின்னர் செடிகளை ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.மீண்டும் வெயிலில் உலர்த்த வேண்டும்.
- இது போன்று மொத்தம் 3 முறை செய்த பிறகு செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
- இந்த பயிருக்கு சாகுபடி செலவு குறைவு முறையாக சாகுபடி செய்தால் அதிகம் லாபம் தரக்கூடிய பயிர் எள்.
‘இளச்சவனை எள்ளு தூக்கிவிடும்’ என்று விவசாயிகளிடத்தில் ஒரு பழமொழியும் உண்டு. உழவுக் கூலி மற்றும் அறுவடைக் கூலி, ஒரே ஒரு களை எடுத்தல் கூலி என்று ஏக்கருக்கு வெறும் 3 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் ரூபாய் 20 ஆயிரம் வரை லாபம் பெறலாம்.
நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்