தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரையில், 20-க்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கின. அவற்றை மீண்டும் கடலில் கொண்டுபோய் விட்டநிலையில், உடனடியாக 4 டால்பின்கள் இறந்து கரைஒதுங்கின. இந்த சம்பவம் நடந்த அடுத்தநாளே இன்னொரு துயரமும் நடந்துள்ளது.
சென்னை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான மீன்கள் இறந்து கரைஒதுங்கியுள்ளன.
திடீரென நடந்த இந்நிகழ்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்பட அடையாறு ஆற்றின் கரையோரம் முழுவதுமே மீன்கள் இப்படி கரைஒதுங்கின.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர்.
சம்பவ இடத்துக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள், உடனே இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அந்தப் பகுதி மக்களிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இனப்பெருக்க காலத்தின்போது மீன்கள், கடல்பகுதியில் இருந்து கழிமுகம் பகுதிக்கு வருவது வழக்கம்.
அந்த சமயத்தில், ஆற்றில் கழிவுநீர் கலந்ததால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளின் விளைவே இதுபோன்ற உயிரிழப்புகள் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
நன்றி: விகடன்
மனிதன் இயற்கையோடு இப்படியே விளையாடி கொண்டிருந்தால், நம் பேரன்களோ, கொள்ளுபேரன்களோ இப்படி சென்னை முழுவதும் ஆக்ஸிஜன் இல்லாமல் செத்து போவார்கள் என்பது நிச்சயம்.
காற்று நிலைமை மோசமானதால் டெல்லி எப்படி இருக்கிறது என்பது ஒரு எச்சரிக்கை!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்