கத்திரி சாகுபடி

நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் அடங்கிய மண்ணில், கத்தரியை சாகுபடி செய்யலாம்.

கோ-1, கோ-2, எம்.டி.யு-1, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்-1, கே.கே.எம்-1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.

விதை நேர்த்தி:

 • கத்தரியை சாகுபடி செய்ய ஏற்ற மாதங்கள் டிசம்பர், ஜனவரி, மே-ஜூன், ஒரு எக்டேருக்கு 400 கிராம் விதைகள் போதுமானது.
 • 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
 • 400 கிராம் விதைகளுக்கு, 40 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் சிறிது அரிசி கஞ்சியை கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
 • இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உயரமான மேட்டு பாத்திகளில் 10 செண்டிமீட்டர் இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளை பரவலாகத் தூவவேண்டும்.
 • விதைத்த பின்பு மணலை போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.

நீர் நிர்வாகம்:

 • நடவு செய்து 3-வது நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
 • அதன் பின்னர் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
 • மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
 • 1 லிட்டர் புளுகுளோரலின் என்னும் களைக்கொல்லியினை, 500 லிட்டர் நீரில் நன்கு கலந்து தெளிக்கவேண்டும். பின்னர் நீர் பாய்ச்சி நாற்றுகளை நட வேண்டும். மேலுரமிடுவதற்கு முன்பாக களைக்கொத்தி கொண்டு களைகளை நீக்கவேண்டும்.
 • நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச் செடிகளின் நுனித்தண்டுகள், இவைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். இவைகளை கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப்புழுக்கள் காணப்படும்.
 • இவ்வகை புழுக்கள் காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களை குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித்தண்டினை கிள்ளி எறித்து விடவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட காய்களை பறித்து, அழித்துவிடவேண்டும்.

நூற்புழு தாக்குதல்:

 • இதனை கட்டுப்படுத்த 3 லிட்டருக்கு 4 கிராம் என்ற அளவில் 50 சதவீத கார்பரில் தூளை கலந்து தெளிக்கவேண்டும்.
 • காய்களை தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குயினால்பாஸ் 2 மில்லியை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
 • நடவு செய்த 15 நாட்களுக்கு பின்னர் ஒரு எக்டேருக்கு 15 கிலோ கார்போபியூராணை செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும்.
 • நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விதைகளை ட்ரைகோடெர்மா விரிடியை 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும் 1 சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போபியூரான் இடுதல் வேண்டும்.

வெள்ளை ஈக்கள்:

 • வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டேருக்கு 12 மஞ்சள் நிற ஒட்டும் பசை தடவிய அட்டை பொறியை வக்க வேண்டும்.
 • 1 லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் என்ற அளவில் டைத்தேன் எம் 45 கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.
 • இதன் மூலம் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம். வாடல் நோயை கட்டுப்படுத்த இந்நோய் தாக்கப்பட்ட செடியை வேருடன் பிடுங்கி எரித்து விடவேண்டும்.
 • நோய் பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்த மீதைல்டெமட்டான் 2 மில்லியை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும்.
 • காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
 • அறுவடை செய்யும் போது காம்பின் நீளம் 4-6 செ.மீ இருக்குமாறு அறுவடை செய்ய வேண்டும். மேற்கண்ட முறைகளை பின்பற்றினால் எக்டேருக்கு 150-160 நாட்களில் 25 முதல் 30 டன்கள் மகசூலினை பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்

நன்றி:: ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கத்திரி சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *