கரும்பு பயிரில் எடையுடன் கூடிய மகசூல் பெற நீர் பாசனம் செய்ய வேண்டிய பருவங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
- கரும்பு பயிர் நிமிர்ந்து நிற்பதற்கும், வெயிலின் தாக்கத்தால் வாடாமல் இருப்பதற்கும், வேர்மூலம் ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்வதற்கும் ஒளிச்சேர்க் கை மூலம் சர்க்கரை மற்றும் மாவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், பயிரினுள் நடைபெறும் வேதியியல் மாறுதல்களுக்கும் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வளரும் பயிரின் எடையில் 80 முதல் 85 சதவீதம் வரை நீர் உள்ளது. ஒரு டன் கரும்பு விளைவிக்க 125 டன் நீர் தேவைப்படுகிறது. ஒரு டன் சர்க்கரை உற்பத்தி செய்ய 1,350 டன் நீரை கரும்பு பயிர் எடுத்து கொள்கிறது.ஒருபோக கரும்பு சாகுபடி செய்ய 2000 முதல் 2500 மி.மீ நீர் தேவைப்படுகிறது.
- ஒரு எக்டேர் பரப்பில் ஒருபோக கரும்பு சாகுபடி செய்ய தேவைப்படும் 2,500 மி.மீ நீரை கொண்டு இருபோக நெற்பயிரையோ அல்லது ஐந்துபோக சோளப்பயிரையோ அல்லது எட்டுபோக கம்பு பயிரையோ பயிரிடலாம். பாசனநீரை பருவத்தை பொருத்து பல்வேறு இடைவெளிகளில் 38 முதல் 40 முறை பாசனம் செய்ய வேண்டும்.
- 1 முதல் 35 வரை நாட்களான முளைப்பு பருவத்தில் 7 நாட்கள் இடைவெளியில் 5 பாசனமும், 36 முதல் 100 நாட்கள் வரையிலான தூர்கட்டும் பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 5 பாசனமும், 101 முதல் 270 நாட்கள் வரையிலான வளர்ச்சி பருவத்தில் 8 நாட் கள் இடைவெளியில் 21 பாசனமும், 271 முதல் அறு வடை வரையிலான முதிர் ச்சி பருவத்தில் 13 நாட்கள் இடைவெளியில் 6 பாசன மும் என மொத்தம் 38 முறை கரும்புக்கு பாசனம் செய் வதன் மூலம் நீர்ச்சத்து நிறைந்த எடையுடன் கூடிய அதிக சர்க்கரை, பிழிதிறன் கொண்ட கரும்பு நமக்கு மகசூலாக கிடைக்கும்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்