கரும்பில் செம்மை சாகுபடி

 • கரும்பு சாகுபடியில் கணு பருக்கள் மூலம், செம்மை முறை சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • கரும்பு விவசாயிகள் காலம் காலமாக, விதை கரும்பில் இருந்து, கரும்பு கணுக்களை அரை அடி உயரத்திற்கு வெட்டி நடவு செய்து வந்தனர்.
 • ஒரு ஏக்கருக்கு 4-5 டன் விதை கரும்பு தேவைப்பட்டதால், மூலதன செலவு கூடுதலாக இருந்தது. இம்முறைக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது.
 • புதிய கண்டுபிடிப்பான “செம்மை கரும்பு’ சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செம்மை நெல் சாகுபடியை போல, குறைந்த அளவு “கணு பருக்களை’ கொண்டு விதைப்பு செய்யப்படுகிறது.
 • கரும்பு கணுக்களில், விரல் நுனி அளவில் வளர்ந்திருக்கும் கணுக்களை பட்டையுடன் வெட்டி எடுத்து, தென் னை நார் கழிவுகளை பரப்பி, நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
 • இதில் தண்ணீர் தெளித்து வர, 30-35 நாட்களுக்குள் நாற்று தயார்.
 • இம்முறையில் 50 கிலோ நாற்று இருந்தால், ஒரு ஏக்கர் பயிரிடலாம்.
 • வரிசைக்கு 5 அடி, பயிருக்கு 2 அடி இடைவெளி விடவேண்டும். இந்த இடைவெளிகளில் முதல் மூன்று மாதங்களுக்கு தர்பூசணி, வெங்காயம், வெள்ளரி பயிரிடலாம்.
 • ஒரு கணுவில், 15-20 சிம்புகள் வெடித்து தூர் பெரிதாகும். ஒரு கணு பருவில் இருந்து 30 கிலோ வரை கரும்பு கிடைப்பதால், ஒரு ஏக்கரில் 150 டன் மகசூல் கிடைக்கும்.
 • இந்த முறையில் கரும் பை, 6-7 முறை வரை, மறுதாம்பு விடலாம்.
 • புரட்டாசி, ஐப்பசியில் இத்திட்டம், தமிழக அளவில் அறிமுகமாகிறது.

முதல் கட்டமாக உழவர் பயிற்சி நிலைய அமைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, வேளாண் இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *