கரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி?

அறிகுறிகள்:

  • இந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல்போன்ற இலைகள் தழையும்.
  • இது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய். இவ்வாறு தழையும் இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • இதுபோன்று பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு சரிவர வளராது. அவ்வாறே வளர்ந்தாலும் இடைக்கணுப் பகுதி மிக சிறியதாகக் காணப்படும்.
  • இந் நோயை உண்டாக்கும் நச்சுயிரி, தாவரச்சாறு மூலம் பரவுகிறது. கட்டைப்பயிர் வளர்த்தல் மூலமும் இந்நச்சுயிரி பரவுகிறது. அசுவினி பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது.

தடுப்பு முறைகள்:

  • நோய்பட்ட கரும்புச் செடிகளை அகற்ற வேண்டும்.
  • முன் சிகிச்சையாக கரணைகளை (ஆரோக்கிய மானவை) வெந்நீரில் (52 டிகிரி செ) வைக்கலாம்.
  • இந்த முறையை நாற்று நடுவதற்கு ஒரு மணி நேரம் முன் செய்தல் வேண்டும்.
  • அல்லது கரணைகளை 54 டிகிரி செ. வெப்ப காற்றில் எட்டு மணி நேரம் வைத்து முன்சிகிச்சை செய்து பின்னர் நடவேண்டும்.
  • எதிர்ப்புசக்தி கொண்ட பயிரினை பயிரிடுதல் சிறந்த முறையாகும்.
  • நடவு செய்யும் நாற்று நோயற்றதாக இருத்தல் மிக அவசியம்.
  • பயிர் தூய்மை மிக அவசியம். தோகை (சோகை) உரித்தல், அதிகப்படியான நீரை வடித்தல் நன்று.
  • நோய் பாதிக்கப் பட்ட வயல்களில் கட்டைப்பயிர் வளர்த்தலை தவிர்க்கவும்.
  • பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்.
  • பயிரிடுவதற்கு முன் விதைநேர்த்தி சிகிச்சையை 520சி.யில் முப்பது நிமிடத்திற்கு பின்பற்றிட வேண்டும்.
  • கரும்பில் இடைக்கலப்பு முறையை பின்பற்றிடல் வேண்டும். இதன்மூலம் அந்தந்த இடத்திற்கு ஏற்ப, திறன்கொண்ட பயிர்களை வளர்க்கமுடியும்.
  • துத்தநாகச் சத்து, இரும்புச்சத்து பற்றாக் குறையினால் பயிர்களின் இலை மஞ்சளாகி வெளுத்து காணப்படும்.இதற்கு எக்டேருக்கு 2 கிலோ பெரஸ் சல்பேட், ஒரு கிலோ துத்தநாக சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத் தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • கரும்பு பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் இடுவதால், வேர்களை சுற்றி மண்ணில் தங்கி வளர்ந்து காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு அளிக்கும்.
  • நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் ஒரு கிலோ கம்போஸ்டு அல்லது தொழு உரத்துடன் கலந்து பாஸ்பேட் உரத்தை இட்டபிறகு, நடவுகால்களில் கரும்பு நடுவதற்கு முன் இடவேண்டும்.
  • கரும்புத் தோகையைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரித்து மண்ணின் கரிம மக்கை மேம்படுத்தலாம்.
  • பயிர் சாகுபடிக்கு முன், மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களின் அளவுகளை அறிந்து உரம் இடவேண்டும்.

தகவல்: எம்.அகமது கபீர்,
தாராபுரம்-638 656. அலைபேசி எண்: 09360748542.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *