கரும்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

கரும்பில் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் முறைகளை சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை வெளியிட்டுள்ள அறிக்கை:

  • வெப்பம் அதிகமாக இருப்பதால் கரும்பில் இளம் குருத்துப்புழு மற்றும் இடைக்கணுப் புழு தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • இளம் குருத்துப்புழு கரும்பு நடவு செய்த 15 முதல் 120 நாட்கள் வரை தாக்கும் நிலை உள்ளது.ஒரு தாய்ப்புழு 400 முட்டைகள் வரை இடுவதால் இப்புழுவின் தாக்குதல் வேகமாக அதிகரிக்கும். தாக்கப்பட்ட பயிர்களின் தாய் கரும்பு அழுகிவிடும்.
  • இதைத் தடுக்க ஆழக்காலில் கரும்பு நடவு செய்ய வேண்டும்.
  • இளம் பயிருக்கு லேசாக மண் அணைக்க வேண்டும்.
  • ஊடுபயிராக தக்கைப் பூண்டு, சணப்பை விதைக்க வேண்டும்.
  • நடவு செய்த 20ம் நாள் ஏக்கருக்கு 4 கிலோ அவானா வேம்பு சார்ந்த குருணையை நிலம் ஈரமாக உள்ள போது போட வேண்டும். அதிக தாக்குதல் இருந்தால் 500 மி.லி., கார்போசல்பான் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • தழைச்சத்து அதிகம் இட்ட பயிரிலும் தண்ணீர் தேங்கிய பயிரிலும் இடைக்கணுப்புழு தாக்குதல் அதிகமிருக்கும்.
  • இப்புழுக்களும் அதிக முட்டைகள் இடுவதால் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. பூச்சி தாக்காத கரும்பை நட வேண்டும்.
  • அதிக அளவு தழைச்சத்து உரங்கள் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • நன்மை செய்யும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி மற்றும் டெட்ராஸ்டிக்கஸ் கூட்டுப்புழுவை விட்டும் கட்டுபடுத்தலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து தாய் புழுக்களை கவர்ந்து அழித்தும் கட்டுபடுத்தி அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *