கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி

கரும்புத் தோகை கழிவு உரம் தயாரிக்கும் முறை:

 • நிழல் தரும் வசதியான இடத்தில் 15மீ நீளம், 3மீ அகலம், 1மீ ஆழம் உள்ள குழியை ஏற்படுத்த வேண்டும்.
 • இந்த குழியில் சுமார் 500கிலோ கரும்புத் தோகையைப் பரப்ப வேண்டும்.
 • இதன் மீது ஆலைக்கழிவினை 5செ.மீ அளவிற்கு பரப்ப வேண்டும்.
 • இதன் மீது காளான் வித்து,யூரியா,மாட்டுச்சாணம் இவைகளை நீரில் கரைத்து இந்தக் கரைசலை இதன் மீது ஒரே சீராகத் தெளிக்க வேண்டும்.
 • இவ்வாறு மாற்றி மாற்றி தோகை,பூஞ்சாணம், சக்கரை ஆலைக்கழிவு ஆகியவற்றை உபயோகித்து 10 முதல் 15 அடுக்குகள் வரை தோகையை குழியில் பரப்பலாம்.
 • ஒவ்வொரு அடுக்கும் நன்கு நன்கு நனையும்படி யூரியா, காளான்வித்து, மாட்டுச்சாணம் கலந்த கலவையைத் தெளிக்க வேண்டும்.
 • கடைசி அடுக்கின் மீது 15செ.மீ கனத்திற்கு மண் கொண்டு மொழுகி குவியல் முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
 • வாரத்திற்கு ஒரு முறை குவியல் நன்கு நனையும்படி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
 • குவியல் ஈரமாக இருந்தால் நுண்ணுயிர்கள் பெருகி தோகை மக்குவது துரிதமாகும்.
 • மூன்று மாதங்கள் முடிந்து தோகை குவியலைப் பிரித்து நன்றாக கலந்து மீண்டும் குவியலாக்க வேண்டும்.
 • நான்காவது மாதத்தில் தோகை நன்கு மக்கி ஊட்டமேற்றிய தொழுஉரமாக மாறும்.
 • இவ்வாறு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் எருவில் 0.80 சதம் தழைச்சத்தும், 0.2 சதம் மணிச்சத்தும், 0.70 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. இது ஒரு சிறந்த இயற்கை உரமாகும்.

தகவல்: வேளாண்மைத்துறை, உழவர் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *