விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகள் பலன் அடையும் வகையில் கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் புதிய நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் செய்து அதற்கான செயல்விளக்க பயிற்சி தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் விவசாயிகளின் வயலுக்கு சென்று அதிகாரிகள் செய்து காட்டினர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,
விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை (இலைகள், கரும்பு சோகை, தழை) அந்த மண்ணிலேயே குறுகிய காலத்தில் மட்கவைத்து உரமாக்குவதற்கு இந்த நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுகிறது.
ஒரு ஏக்கர் கரும்பு வயலுக்கு 10 கிலோ போதும்.
இக்கலவையை 20 கிலோவிற்கு 40 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் போதும், நிலம் ஈரப்பதத்துடன் இருப்பது முக்கியம். 60 நாட்களில் முழுவதுமாக கரும்பு தோகைகள் மக்கிவிடும். இது மண்ணுக்கு சிறந்த சத்தாகும். மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு பயிரிடவேண்டும்.
பயிர்களை தாக்கும் நோய்களை விவசாய அதிகாரிகளிடம் காட்டி அவர்கள் கூறும் ஆலோசனைப்படி மருந்துகளை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்