கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.6,598 கோடி நிலுவை வைத்துள்ளதாக மாநிலங்களவையில் அமைச்சர் தெரிவித்தார். கடந்த மாதம் வரை கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையின் அளவு இது என்று மாநிலங்களவையில் பதில் அளிக்கையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்திரி இத்தகவலைத் தெரிவித்தார்.
கடந்த சந்தை ஆண்டில் (2015-16 அக்டோபர்-செப்டம்பர்) ஆலைகள் அளிக்கவேண்டிய தொகை ரூ.5,368 கோடி, முந்தைய ஆண்டு (2014-15) நிலுவைத் தொகை ரூ.577 கோடி, அதற்கு முந்தைய ஆண்டு (2013-14) நிலுவைத் தொகை ரூ.653 கோடி என்று அமைச்சர் கூறினார்.
கரும்பு பயிரிடும் விவசாயி களுக்கு தொகை வழங்குவது என்பது தொடர் நடவடிக்கை யாகும். ஆலைகள் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை பருவத்திற்கு பருவம் மாறுபடும். இத்தகைய நிலுவைத் தொகையால் எவ்வளவு விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் அரசின் வசம் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
2015-16-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆலைகள் அதிகபட்சமாக ரூ.2,877 கோடியும், தமிழகம் ரூ.1,030 கோடி யும் நிலுவை வைத்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகம் கரும்பு உற்பத்தியாகும் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.411 கோடியாகவும், பஞ்சாப் ரூ.226 கோடி, உத்தராகண்ட் ரூ.209 கோடி, குஜராத் ரூ.203 கோடி, ஹரியாணா ரூ.126 கோடி, கர்நாடகம் ரூ.108 கோடி என்ற அளவில் நிலுவை வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்