கால்நடைகளுக்கு கரும்புத் தோகை தீவனம் வழங்கலாம் என விழுப்புரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பேராசிரியர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
- கால்நடை பண்ணையின் உற்பத்தி மற்றும் பொரு ளாதாரம், கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தை பொறுத்து உள் ளது.
- விழுப்புரம் மாவட்டத்தில் மேய்ச்சலை மையமாக வைத்தே கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.இந்தாண்டு பருவமழை பொய்த்துள்ளதாலும், போதிய மேய்ச்சல் நிலப் பரப்பு குறைந்துள்ளதாலும், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- இதனை ஈடு செய்ய, கால்நடைகளுக்கு கரும்புத் தோகைகளை தீவனமாக வழங்கலாம்.
- ஒரு ஏக்கர் கரும்பு வயலில் இருந்து 7 ஆயிரம் கிலோ கரும்புத் தோகை உபப்பொருளாகக் கிடைக்கிறது. கரும்பு தோகைகளை 1 முதல் 2 அங்குளம் நீள முள்ள சிறு துண்டுகளாக வெட்டி, ஆயிரம் கிலோ கரும்புத் தோகைக்கு, சர்க்கரை ஆலைகளிலிருந்து கிடைக்கும் 20 கிலோ கழிவுப்பாகு அல்லது வெல்லம், 10 கிலோ சமையல் உப்பு மற்றும் 10 கிலோ யூரியாவைக் கலந்து குழிகளில் சேமித்து வைக்க வேண்டும்.
- இவ்வாறு செய்வதன் மூம் 60 முதல் 65 சதவீதம் வரை காய்ந்து போவது தவிர்க்கப்படுகிறது.
- இந்த தீவனம் ஊட்டச்சத்து மிகுந்துள்ளதால் கால்நடைகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.
- இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர், விழுப்புரத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை, 04146225244 என்ற எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளாம்.
- இவ்வாறு உதவி பேராசிரியர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்