கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.
இப்போது பனமரத்துப்பட்டி பகுதியில், இடைக்கனு புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், செங்கரும்பு நடவு செய்த விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
நடவு செய்த, ஒன்பது மாதத்தில் குறைந்தபட்சம் ஆறு அடி உயரத்திற்கு கரும்பு வளர்ச்சி இருக்கும். தற்போது, இடை கனு புழு தாக்கியதால், நான்கு அடி உயரம் மட்டுமே கரும்பு வளர்ந்துள்ளது.
அடிபகுதியில் குண்டாக இருக்கும் கரும்பு மேல் பகுதி சிறிதாகி, குருத்து உடைந்து விடுகிறது.
நோய் தாக்கியதால், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மருந்து, உரம் என, செலவு அதிகரித்துள்ளது.
செங்கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. செங்கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு, அரசு மானிய உதவிகள் ஏதும் வழங்குவதில்லை.
பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிக்குமார் கூறியதாவது:
- செங்கரும்பு சோகை தவறாமல் உரித்து வந்தால், நோய் தாக்குதல் குறையும்.
- சத்து குறைவு காரணமாக, கரும்பு போதிய வளர்ச்சி இன்றி இருக்கும்.
- இடைகனு புழு தாக்கிய வயலில், டிரைக்கோ கிரம்மா என்ற ஓட்டுண்ணியை விட வேண்டும்.
- இந்த ஒட்டுண்ணி, கரும்பில் இருக்கும் புழுவை சாப்பிடுவதால், நோய் கட்டுப்படுத்தப்படும்.
- ஒரு இடை கனு புழு, 300 பூச்சிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
- பூச்சிகளை தடுக்க, கரும்பு வயலில் இனக்கவர்ச்சி பொறி அமைக்கலாம்.
- வயலில் தொடர்ந்து ஒரே வகை பயிர்கள் பயிரிடாமல், சுழற்சி முறையில் மாற்று பயிர் பயிரிட வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்