பெரம்பலூர் மாவட்டத்தில் செம்மை கரும்புச் சாகுபடியில் செயல் விளக்கம் அமைக்க 50 சத மானியத்தில் இடுபொருள்களும், நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சத மானியத்தில் உபகரணங்களும் பெற விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் வேளாண் உதவி இயக்குநர் சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
- எஸ்.எஸ்.ஐ. எனப்படும் செம்மைக் கரும்புச் சாகுபடியானது, கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறையாகும்.
- மேலும், நீர் சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும். இந்த முறையில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
- எனவே இந்த முறையில் உற்பத்தி அதிகரிப்பதோடு நீர்நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும்.
- செம்மை கரும்பு சாகுபடி முறையானது குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து, சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர்பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் முறையாகும்.
- ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து, நாற்றங்கால் அமைத்தல் 25 முதல் 35 நாள்கள் இளம் வயதான நாற்றுகளை எடுத்து நடவு செய்தல், நடவின்போது வரிசைக்கு வரிசை குறைந்தது 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும், பராமரித்தல், நீர்ப் பாசனத்தின்போது தேவையான அளவு ஈரப்பதம் மட்டுமே நீர் பாய்ச்சுதல், இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல், ஊடுபயிர் பராமரித்து மண்வளம் மற்றும் மகசூல் அதிகரித்து ஆவன செய்தலே செம்மை கரும்பு சாகுபடியின் முக்கியக் கோட்பாடுகளாகும்.
- தண்ணீர் முளைப்புத் திறன் குறைக்கப்பட்டு, ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் பெறச்செய்து, சரியான உரமிட்டு ஊட்டச்சத்து பராமரிப்பை மேம்படுத்தி, பயிர் சாகுபடி காலத்தை ஓரளவு குறைக்கும் செம்மை நெல் சாகுபடிக்கான செயல் விளக்கம் அமைப்பதற்கான இடுபொருள்கள் 50 சத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
- அதாவது, இரண்டரை ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறு, குறு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திற்காக 100 சத மானியத்தைப் பெறலாம்.
- மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது சம்பந்தப்பட்ட வேளாண் உதவி அலுவலர்களை அணுகிப் பயன் பெறலாம்.
- நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்