த.வே.ப.க. கரும்பு சி.8:
- நடு, பின் பட்டத்திற்கேற்ற சிறந்த ரகமாகும்.
- அதிக சர்க்கரை சத்து 13 சதம்.
- பருமனான நிமிர்ந்த கரும்பு. இக்கரும்பு சுனையற்றது.
- தோகை மிக எளிதில் உரிக்கலாம்.
- இயந்திரம் மூலம் அறுவடைக்கும் உகந்த ரகமாகும்.
- வறட்சி மற்றும் அதிக நீர்த்தேக்கத்தை தாங்கும் திறனுடையது.
- செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.
- களர்நிலத்தில் நன்றாக வளரக்கூடிய ஒரு சிறந்த கரும்பு ரகம்.
- வயது 330 நாட்கள்.
- பருவம் – நடு மற்றும் பின்பட்டம் (பிப்ரவரி முதல் மே வரை).
- விளைச்சல்-146 டன்கள்/எக்டர். (மறுதாம்பு 135 டன்கள்/எக்டர்). அதிக விளைச்சலாக எக்டருக்கு 187 டன் கரும்பு மகசூல் தரும்.
- உகந்த மாவட்டங்கள் – கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது.
- தொடர்புக்கு: 0431261 4217.
கரும்பு ஆராய்ச்சி நிலையங்கள்:
- வேலூர் மாவட்டம் குடியாத்தம், தொடர்புக்கு 04171222 0275.
- கடலூர், தொடர்புக்கு 04142220630,
- திருச்சி மாவட்டம், சிறுகமலை, தொடர்புக்கு 0431261 4217.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்