வறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிகள்

கரும்புப் பயிருக்கு வறட்சி மேலாண்மை முறைகள் குறித்து ஆரணியை அடுத்த சேவூர், சிறுமூர், அக்ராபாளையம் கிராமங்களில் செயல்விளக்க வயல் விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் சேவூர் கோட்ட கரும்பு அலுவலர் மு.வேலாயுதம் பேசியது:

  • இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது.
  • இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு கரும்பு பயிரில் ஒரு ஏக்கருக்கு 2.5 சதவீதம் பொட்டாஷ் கரைசலை தெளிக்க வேண்டும்.
  • அதாவது 2 முதல் 3 மாத வயதுடைய பயிருக்கு 2.5 கிலோ யூரியாவுடன் 2.5 கிலோ பொட்டாஷ் உரத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் இலைகள் மீது கரும்பு தோகை நன்கு நனையும்படி மாலை நேரத்தில் தெளிப்பதன் மூலம் பயிர் ஒரு மாதம் வரை காயாமல் பசுமையுடன் காணப்படும்.
  • மேலும் இம்முறையை 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் என்று கூறி செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
  • மேலும் 5 முதல் 6 மாத வயதுடைய கரும்பு தோட்டங்களில் சோகை உரித்து அந்த காய்ந்த சோகையை பார்களின் மீது அப்படியே பரப்புவதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் பாதுகாத்து கரும்பு பயிரை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம் என்றும் தெரிவித்தனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *