காடுகள் நிறைந்த இடங்கள் இந்தியாவில் மிகவும் குறைந்து விட்டன. ஒரு காலத்தில் 33% சதவீதம் வரை இருந்த காடுகள் இப்போது எங்கே இருக்கின்றன என்று தேடி போக வேண்டிய நிலைமை
இப்போதும் சில அடர்ந்த காடுகள் சத்திஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ளன
இந்த காடுகளின் துர் அதிர்ஷ்டம் – இவற்றின் உள்ளே உள்ளே நிறைய தாதுக்கள் உள்ளன. இந்த இடங்களில் தாதுக்களை தோண்டி எடுக்க அனுமதி கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் கியீவில் நிற்கின்றன.
சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி, காட்டில் திட்டங்களை செயல் படுத்த சட்டபடியான ஒரு குழுவை மதிய சுற்று சூழல் அமைச்சரவை
கீழே நிறுவி உள்ளது. இந்த குழு பெயர் வனவியல் ஆலோசனை குழு Forest Advisory Committee என்பதாகும்.
இந்த குழுவில் வனவியல், காடு வனவிலங்குகள், நீர் ஆராய்ச்சியாளர்கள்
போன்ற நிபுணர்கள் இருக்கின்றனர்.இவர்கள் ஒரு திட்டத்தின் மூலம் எப்படி பட்ட பாதிப்புகள் என்று பார்த்து அனுமதி கொடுப்பர் அல்லது அனுமதி மறுப்பர்.
இப்படி பட்ட நிபுணர்கள் இருப்பதால் பெரிய கம்பனிகளுக்கு சுரங்கம் அமைப்பது என்ற பேரில் அடர்ந்த காடுகள் அழிக்க தடை ஆக இருந்து வந்தது
நம்முடைய பொருளாதார மேதை மன்மோகன் சிங்க் அரசை பற்றி தான் தெரியுமே. ஒன்னும் இல்லாத காற்றில் (Spectrum) 176000 கோடி
ஊழல் செய்தவர்கள்.
காட்டில் லைசென்ஸ் கொடுத்து சாப்டலாம். இதற்கு ஒரே தடை வனவியல் ஆலோசனை குழு.
பார்த்தார் ஜெயந்தி நடராஜன். இந்த குழுவையே மாற்றி அமைத்தார். இந்த குழுவில் இப்போது இருப்பவர்களில் சிலர் K.P.Nyati, N.P Todaria
போன்றவர். இவர்கள் சுரங்க தொழில் உடன் தொடர்பு கொண்டவர்கள்.
அதாவது காட்டில் சுரங்கம் அமைப்பதா கூடாதா என்பது பற்றி சுரங்கம் தொடர்பு உள்ளவர்கள் தீர்மானிப்பர்! இது எப்படி இருக்கு!
இனி என்ன? வேட்டை தான்.
இதோ. இதை பற்றிய செய்திகள் Economic Times பத்திரிகையில்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்