காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி

காய்கறி பயிர்களை தாக்கும் பல வகை சாறு உறிஞ்சும் பூச்சிகளில் மிக முக்கியமானது அஸ்வினி.பலவகை அசுவுணிகள் காய்கறி பயிர்களை பெரிதும் பாதிக்கச் செய்து வருகிறது.

அசுவிணி பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

 • இலைகள் கூட்டம் கூட்டமாக குருத்துப் பகுதியிலும் இலைகளுக்கடியிலும் இருந்து சாற்றை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்தும்.
 • மிகவும் பாதிக்கப்பட்ட செடிகளில் வளர்ச்சி குன்றி குருத்து இலைகள் சுருங்கி வாடி காய்ந்துவிடும்.
 • மேலும், இப்பூச்சிகளின் பனித்துளி போன்ற கரிமப்பொருள் இலைகளின் மீது விரிந்து அவற்றின் மீது ஒரு வகை கருமையான பூசணம் வரை ஏதுவாகிறது.
 • அசுவுணிகள் சாறு உறிஞ்சும்போது மறைமுகமாக சில வைரஸ் கிருமிகளை செடிகளுக்குள் செலுத்தி அவரைத் தேமல், வெள்ளரித் தேமல் போன்ற நோய்களை பரவச் செய்கிறது.
 • இப்பூச்சிகள் மிகச் சிறிதாகும். பச்சை அல்லது இளம் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும்.
 • அசுவுணியில் இறக்கை இல்லாமலும், இறக்கைகளை உடையவைகளும் காணப்படும். அவை மஞ்சளாகவோ அல்லது மஞ்சள் கலந்த பச்சை அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது கருப்பு நிறமாகவோ காலநிலைகளையும் பயிர்களையும் பொருத்து காணப்படும்.
 • இப்பூச்சிகள் கருவுறாமல் வெற்றின உயிர்களை பிறப்பிக்கக் கூடியது. ஒரு பூச்சியில் இருந்து 22 இனம் அசுவுணி வெளிப்பட்டு அவை ஒரு வாரததில் முழு வளர்ச்சியடைந்துவிடும்.
 • இலைகள் கத்தரி, மிளகாய், தட்டை, உருளை, முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பூசணி, புகையிலை ஆகியற்றை தாக்கும்.அதை கட்டுப்படுத்த அசுவுணி தாக்கி தேமல் நோய் தென்படும்.

தடுப்பு முறைகள்

 • தாக்கப்பட்ட செடிகளை அகற்றி எரித்துவிடவேண்டும்.
 • களைச் செடிகளை நீக்கி அசுவுணியின் பெருக்கத்தை குறைக்க வேண்டும்.
 • நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு, சிற்பிட் ஈ போன்றவை நடமாட்டம் தென்பட்டால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
 • வேப்பம் பருப்புச் சாறு 5 சதம் அல்லது வேப்ப எண்ணெய் 2 சதம் அதனுடன் ஒரு லிட்டருக்கு 4 மில்லி ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
 • பொறி வண்டுகள் ஒரு நாளைக்கு 270 அசுவுணிகள் உண்ணும் திறனுடையது.
 • சிலந்தி மற்றும் எறும்புகளும் அசுவுணிகளை பிடித்து உண்ணும்.

இவ்வாறு “காய்கறி பயிர்களின் தாக்கும் அசுவுணி பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்”  என, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *