காய்கறி பயிர்களுக்கு பயிர் ஊக்கிகள்

பெங்களூருவிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் காய்கறி பயிர்களுக்கென்றே ஒரு பயிர் ஊக்கி கலவையைத் தயாரித்துள்ளது.

 • நுண்ணூட்டச் சத்துக்கள் பயிருக்கு கிடைப்பதில் அவை இடப்படும் முறை முக்கிய பங்காற்றுகிறது. சுண்ணாம்பு அதிகமுள்ள மண்ணில் இடப்படும் இரும்புச்சத்து செடிக்கு கிடைப்பதில்லை. மேலும் மண்ணின் கார அமிலத் தன்மையைப் பொறுத்து சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும் அளவு வேறுபடும்.
 • இந்த பிரச்னைகளைத் தவிர்க்க இலைவழியாகத் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
 • இந்த காய்கறி பயிர் ஊக்கி பயிரின் வளர்தன்மை தேவைக்கேற்ப அதன் அளவும் தெளிக்கப்பட வேண்டிய நேரமும் அளவிடப்பட்டுள்ளது.
 • காய்கறி அதிக விளைச்சல் பெற தயாரிக்கப்பட்ட இலைவழி பயிர் ஊக்கியில் உள்ள நுண்ணூட்டங்கள் அளவு: துத்தநாகம்-4.5%, போரான்-1%, மாங்கனீசு-0.85%, இரும்பு-2.1%, தாமிரம்-0.1%.
 • பயன்படுத்தும் முறை: காய்கறிகளுக்கேற்ப இதன் அளவு மாறுபடும்.
 • 15 லிட்டர் நீருக்கு ஒரு எலுமிச்சையின் சாறு ஒட்டும் திரவம் (7.5 மில்லி) கலந்து தெளிக்கவும்.
 • நடவு செய்த நாளிலிருந்து 5-30 நாட்கள் கழித்து அல்லது விதைத்த 40-45 நாட்கள் கழித்து முதல் தெளிப்பு செய்ய வேண்டும்.
 • முதல் தெளிப்பிலிருந்து முறையே 30 நாட்கள் கழித்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் தெளிப்பு செய்ய வேண்டும்.
 • காலை 6-11 மணி அல்லது மாலை 4-6.30 மணிக்குள் தெளிக்க வேண்டும்.
 • பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்.
 • முதலில் ஊக்கியைக் கலந்துவிட்டு பின் பூச்சிமருந்துகளைக் கலக்க வேண்டும்.
 • தாமிரம் கலந்த பூச்சிக்கொல்லிகளுடன் மட்டும் கலந்து தெளிக்கக்கூடாது.
 • காய்கறிகள் – ஊக்கி அளவு(1 லிட்டர் தண்ணீருக்கு)
  தக்காளி, குடைமிளகாய், பூக்கோஸ், முட்டைக்கோஸ் – 5 கிராம்
  மிளகாய், கத்தரி, வெங்காயம் – 3 கிராம்
  பீன்ஸ், வெண்டை, தட்டைப்பயறு – 2 கிராம்
  கொடிவகை காய்கள், பீர்க்கன்,
  பாகல், புடலை, பூசணி, சுரைக்காய் – 1 கிராம்
 • கத்தரியில் ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் பயிர் ஊக்கி என்ற அளவில் நடவுசெய்த 40வது நாள், 60வது நாள், 80வது நாளில் இலைவழி தெளிக்கப்பட்டது.
 • செடிகளில் காய்களின் எண்ணிக்கை, எடை அதிகரித்து 20 முதல் 25 சதவீதம் கூடுதல் விளைச்சல் கிடைத்துள்ளது.
 • தகவல்: முனைவர் ரா.ஜான்சிராணி, க.இந்துமதி, நா.தமிழ்செல்வன், வே.அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தர்மபுரி. போன்: 04342245 860
  தொடர்புக்கு: இயக்குனர், இந்திய தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், ஹசர்கட்டா (அஞ்சல்), பெங்களூரு. போன்: 0802846 6420
  2 கிலோ அளவுள்ள பாக்கெட்டின் விலை ரூ.250/-
  -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *