கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

பரங்கி, பாகல், பீர்க்கு, புடலை, சுரை, வெள்ளரி போன்ற கொடிவகை காய்கறிகள். இது போன்ற கொடிவகை காய்கறிகளில் பூக்கள் பெருமளவு தோன்றினாலும், பூக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காய்கள் உருவாவதில்லை.

  • இதற்கு காரணம் அதிக அளவு ஆண் பூக்கள் உற்பத்தியாவதே ஆகும்.
  • பொதுவாக 15 முதல் 25 ஆண் பூக்களுக்கு ஒரு பெண் பூ என்ற விகிதத்திலேயே பூக்கள் தோன்றும்.
  • ஆண் பூக்கள் பூக்காம்பின் நுனியிலும், பெண் பூக்கள் பிஞ்சுகளின் நுனியிலும் தோன்றும்.
  • பெண் பூக்களின் எண்ணிக்கை யை அதிகப்படுத்தி மகசூலை அதிகப்படுத்துவதற்கு வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்துவது அவசியமான தொழில்நுட்பமாகும்.
  • இதற்கு எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியினை 250 பி.பி.எம்., அதாவது 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்த விதைப்பு செய்த 15, 22, 29, 36வது நாட்களில் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்வதன் மூலம் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
  • பரிந்துரைக்கப்பட்ட பேரூட்ட உரங்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் காய்கறி நுண்ணூட்ட கலவையினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து விதைத்த 30, 45 மற்றும் 60 வது நாட்களில் இலை வழியாக தெளிப்பதன் மூலம் பிஞ்சுகள் பழுத்து உதிர்வது தவி ர்க்கப்பட்டு தரமான காய்களை அதிக அளவில் பெற முடியும்.

இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட  ரோவர் வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *