விவசாயிகள் நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து தேனி, பெரியகுளம் உழவர்சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகளில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜன் பேசியதாவது:
- காய்கறி பயிர் சாகுபடியில் தாவர பூச்சி கொல்லிகளான வேம்பு சார்ந்த மருந்துகள், உயிரியல் மருந்துகள், மீன் எண்ணெய், ரோசின் சோப்பு வகைகள், பஞ்சகாவ்யா, மஞ்சள் ஒட்டும் பொறி வைத்தல், இனகவர்ச்சி பொறி வைத்தல், விளக்குப்பொறி வைத்தல், உயிரியியல் பூஞ்சான மருந்துகளான சூடோமோனாஸ், ப்ளூரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி, மற்றும் வேம்பு மருந்துகள் பயன்படுத்த வேண்டும்.
- இயற்கை உரங்களான மக்கிய தொழு உரம், மண்புழு உரங்கள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா பயன்படுத்த வேண்டும்.
- காய்கறிகளை பறிப்பதற்கு ஒரு வாரம் முன்பே மருந்து தெளிப்பதை நிறுத்த வேண்டும்.
- முற்றிலும் இயற்கை உரங்களை தயாரித்து சாகுபடி செய்தால், காய்கறிகளுக்கு விற்பனை வசதிகளும் அதிகரிக்கும். தரமான விலையும் பெற முடியும், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்