பாகற்காய் பந்தலில் சுரைக்காய் ஊடுபயிர்

  • விழுப்புரம் அருகே பாகற்காய் பந்தலின் கீழ், சுரைக்காய் ஊடு பயிர் செய்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுகின்றனர்.
  • தற்போது விவசாயப் பணியில் பல்வேறு புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, கூடுதல் லாபம் பெறுவதற்கான முயற்சியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
  • மரவள்ளி, சவுக்கு மற்றும் கொய்யா போன்றவை நடவு செய்தவுடன், அதில் உளுந்து, மணிலா மற்றும் மிளகாய் ஊடுபயிர் செய்கின்றனர்.
  • இவ்வாறு ஊடுபயிர் செய்யும் போது, அதன் மூலம் கிடைக்கும் லாபம், நீண்ட கால பயிர்கள் நடவு செய்த செலவு கிடைத்து விடுகிறது.
  • இதேபோல் காய்கறி பயிர்களிலும், விவசாயிகள் ஊடு பயிர் முறையை மேற்கொண்டுள்ளனர்.
  • விழுப்புரம் அடுத்த பிடாகத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், ஒரு ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைத்து, பாகற்காய் சாகுபடி செய்துள்ளார்.
  • இந்த பந்தலின் கீழ் பகுதியில், சுரை நடவு செய்து, அதன் மூலம் சுரைக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
  • இந்த சாகுபடி முறை யால் கூடுதல் லாபம் கி டைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *