தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் காய்கறி, பழச் செடிகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து கெங்கவல்லி ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குநர் ரங்கநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 சத மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க சிறிய வெங்காயம் சிஒஒஎன்5, பிகேஎம் 1 ரக விதைகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப பாக்கு, மா ஒட்டு செடிகள், கொய்யா, சப்போட்டா போன்ற செடிகள் முள்ளுவாடி, கருமந்துறையிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் 50 சத மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, துணை தோட்டக்கலை அலுவலர் பாஸ்கரன்- 09443599645, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜேஷ்- 09751676112, கோவிந்தராஜ்-09943547770, பாலசுப்பிரமணியம்- 09842431423 உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்