சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் விற்பனை!

சீனா போல் நாமும் வளர ஆசையா? என்ற  பதிப்பில் எப்படி சீனாவின்  காற்று மாசு பட்டு உள்ளது என்று  படித்தோம்.இப்போது இதை ஒரு வாய்ப்பாக கொண்டு ஒரு கம்பெனி காற்றை அங்கே விற்க ஆரம்பித்து உள்ளது! எப்படி நீர் பாட்டிலில் வந்து அதை குடிப்பதை நாம் ஒத்துக்கொண்டு விட்டோமோ அதை போல் கூடிய விரைவில் காற்றையும் பாட்டிலில் வாங்கும் நிலை வந்தாலும் வரும்.

 ஒரே ஒரு நிம்மதியான விஷயம் இந்த காற்று பாட்டில் Made in China என்று இருக்காது 🙂


இதை பற்றிய செய்தி ஆனந்த விகடனில் இருந்து. 

காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங் உள்பட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக அதிகமான புகை வெளியேறுகிறது. மேலும், வீடுகளில் குளிர் காய்வதற்காக நிலக்கரி எரிப்பதிதாலும் அதிக புகை வெளியேறுகிறது. இதனால், அங்கு காற்றில் மாசு பெருகி உள்ளது.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சீனா தலைவர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், அங்கு பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்களுக்காக, கனடா நாட்டிலுள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து சுத்தமான காற்றை பாட்டில் அடைத்து, கனடா நாட்டு தனியார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

லேக் லூயிஸ் மலையின் காற்று இந்திய மதிப்பின்படி ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இதைவிட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்று சுமார் 10 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *