2.5 பில்லியன் ஆண்டு மலைத்தொடரை 40 ஆண்டுகளில் அழித்த கதை!

டெல்லி மற்றும் வட இந்தியாவில் தூசி அதிகம் இருப்பதை அங்கு சென்றவர்கள் பார்த்து இருப்பீர்கள்
தூசி மாசு அதிகம் (PM 10, PM2.5)உள்ள ஊர்களில் உலகலாவில் வட இந்திய நகரங்கள் அதிகம்.

ஒவ்வொரு வருடமும் பஞ்சாபில் கோதுமை சாகுபடி செய்த பின் பயிர்களை எரிப்பது ஒரு காரணம்.
இன்னொரு காரணம் தெரியுமா?

ஆரவல்லி என்று ஒரு மலை தொடர். 2.5 பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது. உலகத்தின் பழைமையான மலை தொடர்களில் ஒன்று

கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் குஜராத்தில் இருந்து டெல்லி வரை, ராஜஸ்தான் ஹரியானா மாநிலங்கள் வழியாக இருக்கிறது. இந்த மலை தொடரில் இருந்த காடுகள் தார் பாலைவனம் பரவாமல் இருக்க உதவி செய்து வந்தன.

ஊர்கள் எல்லாப்பக்கமும் பரவுவது, மலைகளை க்ரானைட் எடுக்க அழிப்பது, காடுகளை அழிப்பது, புதிய சாலைகள் , புதிய layout  என்று பலவிதமாக 3 பில்லியன் வருடம் இருந்த மலைத்தொடரை 40 ஆண்டுகளில் அழித்து இப்போது ICU வில் கொண்டு போய் விட்டுள்ளோம்.

Factories by destroying Aravali
Gaps in the hills
Granite mining

 

செயற்கை கோள் மூலம் எடுத்துள்ள புகைப்படங்கள், கடந்த 30 ஆண்டுகளில் எப்படி ஒரு மலைத்தொடரையே நாம் அழித்து உள்ளோம் என்று தெரிகிறது.

இதனால், தார் பாலைவனத்தில் இருந்து கிளம்பும் தூசி புயல் இப்போது டெல்லி வரை வர ஆரம்பித்து உள்ளது.

டெல்லி தூசி புயல்

 

போன ஆண்டும் இந்த ஆண்டும் தூசி புயலின் வேகமும் நேரமும் அதிகம் இருந்தன. இவற்றால் முதியோர், சிறுவர்கள், எல்லோர்க்கும் உடல் உபாதைகள் வர உள்ளன.

மனிதனின் பேராசை, இயற்கையை நாம் கட்டுப்படுத்த தெரியும் , நமக்கு எல்லாம் தெரியும் என்ற தலைகனம் இதுவே இதற்கு காரணம்.

 

நன்றி: DTE

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *