கம்பு நேப்பியர் புல் விற்பனைக்குத் தயார்

கம்பு நேப்பியர் புல் (கோ-4) கரணைகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பசுந்தீவனப் பயிர்களில் அதிக மகசூல் தரக் கூடிய இந்தக் கம்பு நேப்பியர் புல், அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக் கூடியவையாகும்.

இந்தப் புதிய ரகத்தில் 3.5 சதம் சர்க்கரை சத்து உள்ளது. ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 150 டன் பசுந்தீவன மகசூல் பெற முடியும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 13000 கரணைகள் தேவைப்படும்.

நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முழுத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04286266345, 04286266244, 04286266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *