கறவை மாடுகள் பராமரிப்பு

கறவை மாடுகள் சினைக்கு வந்தவுடன், 18 மணி நேரத்தில், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும் என, கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர், கோபி கூறியதாவது:

  • கறவை மாடுகளுக்கு, சினை பருவத்திற்குரிய அறிகுறிகள், காலை நேரத்தில் தென்பட்டால், மாலை நேரத்திலும்; மாலை நேரத்தில் தென்பட்டால், காலை நேரத்திலும், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும்.
  • அறிகுறி தெரிந்த, 18 மணி நேரத்திற்குள், மாடுகளை தனி இடத்தில் கட்டி, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே, செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்த வேண்டும்.
  • அதன் பின், 15 நிமிடங்கள் கழித்து, வீட்டுக்கு ஓட்டி செல்ல வேண்டும்.
  • மாடுகளை முறையாக பராமரித்தால், ஆண்டுக்கு ஒரு கன்று எளிதாக போடும்;
  • பாலிலும் சீரான வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: 04427264019

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *