குப்பைகளை மேயும் பசுக்களுக்கு இரைப்பை நோய்

பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாலும் குப்பைகளில் மேய்வதால் அவற்றுக்கு இரைப்பை நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்புதான் பிரதானத் தொழிலாக விளங்குகிறது. ஒரு காலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர், சோளத்தட்டுகளை தங்கள் நிலங்களிலேயே விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

விவசாயம் பாதிப்படைந்து வருவதால் கால்நடை வளர்ப்பிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய தீவனத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த தொடர் மாற்றங்கள் காரணமாக, இரைக்காக கால்நடைகள் குப்பைகளில் மேயும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உத்தரவிட்டும் கூட, இன்று வரை   உள்ளாட்சி அமைப்புகள் அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

இதனால் குப்பைகளில் மேயும் கால்நடைகள், அவற்றில் இருக்கும் பாலிதீன் பைகள் உள்ளிட்ட மக்காத கழிவுகளை உட்கொண்டு விடுகின்றன.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

இவ்வாறு தொடர்ந்து உண்பதால் அந்த கால்நடைகளுக்கு இரைப்பை நோய் ஏற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறியதாவது:

  • கால்நடைகளுக்கு ரோமன், ஒமோசம், அபோமேசம், ரெட்டிகுளம் என 4 வகை இரைப்பைகள் உள்ளன.
  • உணவு உட்கொண்டதும் அவை முதலில் ரோமன் இரைப்பைக்கு வரும்.
  • அந்த இரைப்பையில் உள்ள உணவுகளை மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து அவற்றை அசைபோட்டு விழுங்கும் தன்மை கால்நடைகளுக்கு உண்டு.
  • ஆனால் மக்காத கழிவுகளை அதிக அளவில் கால்நடைகள் உட்கொண்டால், அவற்றின் இரைப்பை அடைப்பட்டுவிடும்.
  • இதனால் அங்கிருந்து அசை போடுவதற்கு உணவுகள் வெளியே வராது.
  • இதனால் மாடுகளுக்கு இரைப்பை நோய் ஏற்பட்டு இறந்துபோகும் சூழ்நிலை ஏற்படும்.
  • எனவே கால்நடைகளை குப்பைகளில் மேயவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *