தமிழகத்தில் காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர், புலிக்குளம், ஆலம்பாடி மாடுகள், தோடா எருமை ஆகியவை பாரம்பரிய இனங்களாக உள்ளன. கடந்த, 2012 கணக்கின்படி கலப்பின மாடுகள் 63.5 லட்சம், நாட்டு மாடுகள், 24.5 லட்சம், எருமை, 7.8 லட்சம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பால் உற்பத்திக்காக கலப்பின மாடுகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் பாரம்பரிய மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பு திறனுடன், வறண்ட சூழ்நிலையை தாங்கி வளரும் நாட்டினங்களை பாதுகாக்க கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வு மேற்கொண்டது.
தற்போது பர்கூர், ஆலம்பாடி மாடுகள், தோடா எருமை போன்றவை அழியும் நிலையில் உள்ளன.
பால் தேவைக்காக கலப்பின சேர்க்கை அதிகரிப்பு, இயந்திரமயத்தால் உழவு மாடுகளின் தேவை குறைந்தது. மேய்ச்சல் நிலங்கள் குறைவு போன்ற காரணங்களால் இந்த வகை மாடுகள் அழிந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
தமிழக மாட்டினங்கள் உழவுக்கும், இழுவைக்கும் சிறந்தவை. இவ்வினங்களை கலப்பின மாடுகளுடன் ஒப்பிடும்போது பால் உற்பத்தி குறைவு. இதனால் விவசாயிகள் கலப்பின மாடுகளை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர்.
பாரம்பரிய மாடுகளை பாதுகாக்கும் முயற்சியில் பல்கலை ஈடுபட்டுள்ளது. பூர்வீக ஊரிலே மாடுகளை இனவிருத்தி செய்து பாதுகாப்பது. மற்ற இடங்களில் கால்நடை பண்ணைகளில் வளர்ப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆய்வக முறையில் காளைகளின் விந்து, பசுவின் கருமுட்டை, மரபணு போன்றவற்றை உறைநிலையில் பாதுகாக்கப்படுகிறது. இவற்றின்மூலம் தேவை ஏற்படும்போது நாட்டு இன மாடுகளை உருவாக்க முடியும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Please update some more information about our country bread and country crops…