கோடை காலம் மட்டுமல்லாமல் அனைத்து தட்பவெப்ப சூழ்நிலையிலும் ‘மண்ணில்லா பசுந்தீவனம்’ கால்நடைகளுக்கு வழங்குவது சிறந்தது. செலவில்லாதது. பசுந்தீவனத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும். கோழிகள், ஆடுகள் விரும்பி உண்பதால் எடை அதிகரிக்கும்
மதுரை விளாச்சேரி அருகே தட்டானுாரை சேர்ந்தவர் பொன்வைரன் மின் வாரிய ஓய்வு செயற்பொறியாளர். ஓய்வுக்கு பின் தனது 20 சென்ட் நிலத்தில் கோழி, கறவை மாடு, ஆடுகளை வளர்க்கிறார். இவைகளுக்கு முற்றிலும் மண்ணில்லா பசுந்தீவனத்தை உணவாக வழங்குகிறார். இதனால் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து, நுண்ணுாட்ட சத்துகள் தேவையான அளவு கிடைக்கிறது.
கால்நடை பசுந்தீவனம் தயாரிப்பு குறித்து பொன்வைரன் கூறியதாவது:
- தானியங்கள், மக்காச்சோளம், பார்லி, கோதுமை ஆகியவற்றை கொண்டு பசுந்தீவனம் தயாரிக்கலாம்.
- 600 கிராம் எடை கொண்ட 24 மணி நேரம் ஊற வைத்து முளைகட்டிய தானியத்தை 2 அடி நீளம், 1.50 அடி அகலம், 4 இன்ஞ் உயரம் கொண்ட பிளாஸ்டிக் டிரேயில் வைக்க வேண்டும்.
- இதில் தானியங்களை 5 நாட்கள், மக்காச்சோளம் 7 நாட்கள், கோதுமை 6 நாட்கள், பார்லி 7 நாட்கள் டிரேயில் வைத்து பசுந்தீவன தயாரிப்பு குடிலில் 3 மணிக்கு ஒரு முறை தண்ணீர் ஸ்பிரே செய்ய வேண்டும்.
- கறவை மாடு ஒன்றுக்கு காலை, மாலை ஒரு டிரே, நாட்டு மாடுக்கு காலை மட்டும் ஒரு டிரே, ஆடுக்கு காலை, மாலை தலா இரண்டு கிலோ, 1000 கோழிக்கு காலை, மதியம், மாலை தலா ஒரு டிரே தீவனம் போதும்.
- பசுந்தீவனத்தில் 0.05 சதவீதம் கொழுப்பு இருப்பதால் பால் உற்பத்தி சிறப்பாக இருக்கும். அசோலா பசுந்தீவனத்தில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. இதை உண்ணும் கால்நடைகளின் எடை அதிகரிக்கும்.
- தானியங்கள், மக்காச்சோளம், கோதுமை, பார்லி ஆகியவற்றை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வதால் 100 கிலோவிற்கு 700 ரூபாய் வரை விலை குறையும்.
- நவதானிய பசுந்தீவனம் ஒரு கிலோ 3.50 ரூபாய். மக்காச்சோளம் ஒரு கிலோ 2.50 ரூபாய் என உற்பத்தி செலவாகிறது. நவதானிய பசுந்தீவனம் ஒரு கிலோ 6 ரூபாய். மக்காச்சோளம் 5 ரூபாய் வரை விற்கலாம்.
- பண்ணையில் வேலை பார்க்க எனக்கு உதவியாக ஒருவர் உள்ளார்.
- 20 சென்ட் நிலம், நான்கு கறவை மாடுகள், 80 ஆடுகள், ஆயிரம் கோழிகள் என முழுக்க முழுக்க பசுந்தீவனம் மட்டுமே உணவு. மாதம் சராசரியாக 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது, என்றார்.
தொடர்புக்கு 9444521602 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்