நாட்டு மாடுகளின் சாணத்திலும், விபூதி தயாரித்து வருவாய் ஈட்டலாம்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் சிறப்பாக இருக்கிறது.
உழைப்பிற்கு ஏற்ப, வருவாய் கிடைக்கிறது. அந்த வரிசையில், மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் உள்ளிட்ட கழிவுகளில் இருந்தும் வருவாய் ஈட்டலாம் என, நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் தெரிவித்தனர்.
சாணத்தில் விபூதி தயாரிக்கும், அச்சிறுபாக்கம் அடுத்த, கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த, டி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
எங்கள் அறக்கட்டளை சார்பில், நாட்டு பசு சாணத்தில், ரசாயனம் இன்றி விபூதி தயாரித்து வருகிறோம்.
அதேபோல், நாட்டு மாடுகள் வைத்திருக்கும் கால்நடை வளர்ப்போர், மாட்டு சாணத்தில் விபூதி மற்றும் பாத்திரம் சுத்தப்படுத்தும் சாம்பல், ஊதுவத்தி ஆகிய பொருட்களை தயாரிக்கலாம்.
இதை, அனைத்து கோவில்களில் சந்தைப் படுத்தி கணிசமான வருவாயும் ஈட்டலாம்.
தொடர்புக்கு: 9840041151
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்