முளைப்பாரி பசுந்தீவனம்

தமிழக கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுத்து சென்று ஆற்றில் இடுவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பே முதாதையர் விட்டு சென்ற இந்த உத்தி மூலம் நம்மால் பல வித தானியங்களை முளைக்க வைத்து பசுந்தீவனமாக மாற்றலாம்.

நீர்ப்பற்றாக்குறையால் அதிக பரப்பில் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் மட்டுமல்ல, வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கவும் இந்த உத்தியை கையாளலாம். வெள்ளை மக்காச்சோளம், ராகி, பார்லி, கோதுமை முதலிய தானியங்களை ஊற வைத்து ட்ரே’ முறையில் பரப்பி பூவாளி வைத்து நீர் தெளித்து 10 நாளில் தரமான மண் கலக்காத சுத்தமான கால்நடைகள் பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம்.

கால்நடைகள் ஊற வைத்து உணவுகளை விரும்பி உண்ணும். குறிப்பாக ஊற வைத்த பருத்திக்கொட்டை மட்டுமல்ல கொண்டைக்கடலை, பாசிப்பயறு, உளுந்து, சோயா மொச்சை, எண்ணெய் வித்துக்களை ஊற வைத்து உணவில் கலந்து தரும்போது நிறைவான பால் வரவுக்கு வழி வகுக்கிறது. குறைந்த செலவில், தரமான, சத்தான, நுண்ணுாட்ட சத்துக்கள் நிறைந்த பசுந்தீவனத்தை கால்நடைகள், கோழிகளுக்கு தருவதால் பல மடங்கு பலன் கிடைக்கிறது.

டாக்டர். பா. இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி
9842007125

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *