வெப்பத்தில் இருந்து காப்பாற்ற கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி

வைட்டமின்-சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேக மூட்டத்தின் காரணமாக பகலில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 95 முதல் 96.8 டிகிரி என்ற அளவில் நிலவும் வாய்ப்பு உள்ளதால் கோழிகளிடையே வெப்ப அயற்சி தற்சமயம் இருக்காது.

எனினும் வைட்டமின்-சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும்.

கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் நோய் மற்றும் வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆகவே பண்ணையாளர்கள் அதற்கேற்றால்போல் கோடைகால பராமரிப்பு முறைகளையும், மேல் மூச்சுக்குழாய் நோயை கட்டுப்படுத்த தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நன்றி: தினத்தந்தி 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *