செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில், நோய் மேலாண்மை மற்றும் தடுப்பூசி முறைகள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து, பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்தி:
இந்த பயிற்சியில், செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் ஏற்படும் பல்வேறு நோய்கள், அதன் தாக்கம் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்படும். மேலும், நோய்த் தாக்கம் ஏற்படும் கால அட்டவணைக்கு ஏற்ப, தடுப்பூசி அளிக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது 04286266345 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு, ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்