வெள்ளாடு வளர்ப்பில் லாபம்

வெள்ளாடு வளர்ப்பு என்பது லாபகரமான தொழில் என்றாலும், அதிகபட்ச முதலீடு தேவை என பலரும் இதில் களமிறங்க தயங்குகின்றனர். சில புதுமையான யுக்திகளை கையாண்டால் வெள்ளாடு வளர்ப்பில் அதிக லாபம் சம்பாதிக்கலாம்.

வெள்ளாட்டின் பாலுக்கு பல மருத்துவ குணம் உண்டு. குறிப்பாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. குடல்புண் ஆற்றுவதற்கு அருமருந்தாகவும் உள்ளது.இதுகுறித்து கால்நடை மருத்துவகல்லூரி பேராசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘வெள்ளாடு வளர்ப்பில் ஆடுகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. இறைச்சி, பால் உற்பத்தி என அதன் இனங்களை தேர்வு செய்து வளர்ப்பது அவசியம். தலைச்சேரி, ஜமுனாபாரி இன வெள்ளாடுகள் அதிக பால் உற்பத்தியாகும் இனங்கள். சேலம் கருப்பு, கன்னி ஆடு, கொடி ஆடு இறைச்சிக்கு உகந்தது.

பண்ணையில் வளர்ப்பதற்கு இரண்டு வயதிலான ஆடுகளை வாங்கி வளர்க்கலாம். வெள்ளாடு வளர்ப்பில் தீவனங்கள் மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது. குறிப்பாக, தீவனங்களால் ஆகும் செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் தான் லாபத்தை அதிகரிக்க முடியும்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “வெள்ளாடு வளர்ப்பில் லாபம்

  1. jeyakumar says:

    Naan kanni aadu pannai muraieel valarkinren ethanudaya mutton appati export pannuvathu.ethanudaiya details venum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *