தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்கும் வகையில் விவசாயிகளுக்கும், கால்நடைகளின் தீவனப் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த விவசாயி மணிகண்டன்.
இவர் தனது ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வெள்ளை சோளம், இரும்பு சோளம் பயிர் செய்து அதிக லாபம் பெறுகிறார்.
அவ்வப்போது தேவைக்கு ஏற்ப சோளத் தட்டைகளை அறுவடை செய்து பசுக்கள், ஆடுகளுக்கு கொடுப்பதால் அவை விரும்பி உண்ணுகின்றன.
பால் சுரப்பும் அதிகரிக்கிறது.அவர் கூறியதாவது:
- சொந்த நிலம் இரண்டு ஏக்கரிலும், 15 ஏக்கர் குத்தகை நிலத்திலும் விவசாயம் செய்கிறேன்
- . இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால் விவசாயம் பொய்த்து விட்டது. வறட்சியை தாங்கி வளரும் இரும்பு சோளம் நான்கு ஏக்கரிலும், வெள்ளை சோளம் ஒன்றரை ஏக்கரிலும் விளைவிக்கிறேன்.
- ஒரு முறை உழுது விதை துாவி மீண்டும் டிராக்டர் மூலம் உழுதால் போதும். மருந்து தெளிக்க வேண்டிய அவசியமில்லை.
- ஒரு முறை ஏக்கருக்கு அரை மூடை யூரியா தெளித்தால் போதும்.
- இரண்டரை மாதங்களில் விளைந்து கதிர் வந்து விடும். அதிக தண்ணீர் தேவையில்லை, ஒரு மழையே போதும், வறட்சியை தாங்கி வளரும்.
- இரும்பு சோளம், கேழ்வரகு போல் அதிக இரும்புச் சத்தும், புரதச் சத்துக்களும் கொண்டது. இவற்றை உண்ணும் ஜல்லிக்கட்டு காளைகள் பெருத்த திமில்களுடன் ஜாம்பவான்கள் போல் மிடுக்காக வலம் வரும்.
- வெள்ளை சோளம் பசுந்தழை உணவாக பசுக்களுக்கு கொடுப்பதால் பால் அதிகம் சுரக்கிறது. சோளம் கிலோ ரூ.35க்கு விற்பதால் ஒரு செடியில் இரு வருமானம் கிடைக்கிறது.
- ஏக்கருக்கு 50 கிலோ விதை தேவை. வெள்ளை சோளம் விதை கிலோ ரூ.30, இரும்பு சோளம் ரூ.36க்கு வாங்குகிறேன்.
- அதுமட்டுமல்ல அறுவடை செய்த பின் அரை மூடை யூரியா துாவினால் போதும் மீண்டும் செடிகள் முளைக்கத் துவங்கிவிடும்.
- ஒரு முறை விதைத்து இதுபோல் நான்கு முறை அறுவடை செய்யலாம்.
- ஒவ்வொரு முறை அறுவடை செய்யும் போதும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் லாபம் பார்க்கலாம் என்றார்.
தொடர்புக்கு 09787357632
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்