அதிக லாபம் பெற புதினா சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
- தமிழக சமையலில் புதினாவிற்கு முக்கிய இடம் உண்டு. மருத்துவ குணங்கள் கொண்ட புதினா உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
- மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்குத் தேவையான புதினா பயிரிடப்படுகிறது.
- புதினாவை வணிக நோக்கில் பயிரிட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.
- மித வெப்பப் பகுதிகளில் வடிகால் வசதியுள்ள இருபொறை மண், காரத்தன்மை கொண்ட நிலங்களில் புதினா நன்கு வளரும்.
- நிலத்தை நன்கு பண்படுத்தி ஹெக்டேருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் இட்டால் போதுமானது.
- புதினா செடிகள் பெரும்பாலும் பூச்சித்தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை.
- அவ்வப்போது சாதாரணமாக களை எடுத்தால் போதுமானது.
- ஜூன், ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்ற காலம்.
- உணவுக்கான புதினா நடவு செய்த 5-வது மாதத்தில் இருந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.
- ஒருமுறை நட்ட செடிகள் 4 ஆண்டுகள் வரை பலன் தரும்.
- ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் கிலோ இலைகள் கிடைக்கும்.
- எண்ணெய் தயாரிப்புக்கான புதினாவில் இருந்து ஆவி வடித்தல் முறையில் 150 முதல் 250 கிலோ வரை எண்ணெய் தயாரிக்கலாம்.
- புதினா எண்ணெய் சர்வதேச சந்தையில் கிலோ ரூ.ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
- எண்ணெய்க்கான புதினா 90 நாளில் அறுவடைக்கு வரும்.
- வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடு பயிராகவும் புதினா பயிரிடலாம்.
- 90 நாளில் ஒரு ஹெக்டேரில் ரூ.30 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐயா வணக்கம் எனக்கு புதினா விதை செடி தேவை எங்கு கிடைக்கும் உதவி செய்யுங்கள் . நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கிறேன்
ஐயா எனக்கு புதினா விதைகள் தேவை எங்கு கிடைக்கும் நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளேன்
ஐயா எனக்கு புதினா விதை தேவை
வாழ்க வளமுடன் ,
ஐயா எனக்கு புதினா விதைகள் தேவை ..
8111018709 ,
சேலம் மாவட்டம் ..
நன்றி .
I want mint seed which places in availability