அரைக்கீரை சாகுபடி

அரைக்கீரை சாகுபடி

பருவம் :

இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும்.

மண் :

நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண்பாட்டு நிலம், செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது.

விதையளவு :

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல் :

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாக கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைத்தல் :

கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம் :

விதைகள் விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்து செல்லாமல் இருக்க பு வாளியால் நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் 4 நாட்களுக்கு ஒரு முறை நீப் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள் :

ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விட வேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

களை நிர்வாகம் :

ஒரு வார காலத்தில் முளைக்க ஆராம்பிக்கும். எனவே 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.

பு ச்சி தாக்குதல் :

பு ச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, தௌpக்க வேண்டும்.

அறுவடை :

இக்கீரையானது 30 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. இதனை 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கீரையை அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள் :

உயிர்ச்சத்தான வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவு இக்கீரையில் உள்ளன.

தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் குணமாகிவிடும்.

நன்றி,
யு.ஜோஸ்பாட்ரசல்,
இறுதியாண்டு மாணவர்,
ராமகிருஷ்ணா வித்யாலயா,

வேளாண்மை பல்கலை கழகம்,
கோயம்புத்தூர்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “அரைக்கீரை சாகுபடி

  1. P. Nandakumar says:

    நெச்சி, பிரண்டை.கத்தாழை சமமாக
    Please brief & specifiy.
    P Nandakumar Naidu
    Hyderabad
    9391233001

  2. ந.திருமுருகன் says:

    ஐயா வணக்கம்ங்க நான் சிறுகீரை சாகுபடி செய்துள்ளேன் அதில் 1 பாத்திக்கு அடியரமாக வேப்பம்புண்ணாக்கு 2கிலோ மற்றும் எரு இட்டுள்ளேன் விதை விதைத்து 5 ஆவது நாளிள் ட்ரைக்கோடர்மாவிரிடி, மற்றும் சூடோமோணாஸ் ஒவ்வொன்றிற்கும் 100 மில்லி வீதம் நீரில் விட்டேன் இப்போது 12 நாட்களாகிறது ஆனால் வேரலுகல் மற்றும் வேர் வெட்டுதலால் 3/4 பகுதி கீரைகள் போய்விட்டது கீரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது இதை சரிசெய்ய சரியான வழிமுறையை கூறவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *