கீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு

இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி  கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

  • சிறுகீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, வெந்தையக்கீரை என அனைத்து வகை கீரையின் இலையும், தண்டும் நாம் உட்கொள்ளும் பகுதிகள்.
  • இவற்றின் மீது பூச்சிமருந்து தெளிக்கக் கூடாது.
  • இலை உண்ணும் புழுக்கள் தோன்றும் போதே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். அத்துடன் காதி சோப்பை சேர்ப்பதால், அது நீரையும் எண்ணையையும் ஒட்டும் திரவமாகப் பயன்படும்.
  • இவ்வாறான முறைகளைப் பின்பற்றும்போது விவசாயிகளுக்குக் குறைந்த செலவே ஆகும்.
  • மேலும், விஷமற்ற காய்கறிகளை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்தால், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

இதனால் விவசாயிகளுக்கும் அதிக லாபம் கிடைக்கும் என்றார் விஜயகுமார்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 thoughts on “கீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு

    • gttaagri says:

      Khadi soap is hand made soap from vegetable oils. It does not contain Detergents. Normal laundary soaps like Rin, Surf, all have detergents like Sodium Laureth Sulphate (SLS)
      which is harmful for plants. Khadi soap is not harmful.
      You can get them from Khadi Gramudyog shops in Tamil Nadu.
      Hope this helps

      • Mohanavel says:

        Thanks for your reply. One more doubt how much Khadi soap is needed for 1 ltr water and 2 ml neem oil. For 1 acre how much composition is needed.

  1. Kokulan says:

    16 L கை தெளிப்பனுக்கு எத்தனை g சவர்காரம் இட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *