முன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு “வாக்கிங்’ செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, “கீரை கட்டுகளை’ வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியதாவது:
- கடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம்.
- நான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அமைத்துள்ளேன்.
- ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து,முறையாக கவனித்து வரவேண்டும்.
- ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும்.
- இங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.
மாதம் ரூ.45 ஆயிரம்
- நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.
ஆலோசனைக்கு- 09786948567.
என்.வெங்கடேசன்,
சிவகங்கை.
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
thank you sir i am palani sir i want details please help sir