போளூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகளுக்கு புதினா பயிர் சாகுபடி குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)பழனிவேல் விவசாயிகளிடையே பேசுகையில் –
- புதினா பயிரானது மிக எளிதில் பயிர் செய்யக்கூடியது.
- இந்த புதினா பயிரானது முதல் அறுவடை 60 நாள்களுக்குள் சாகுபடி செய்து பயன்பெறலாம்.
- மேலும் வருடத்துக்கு 5 முறை அறுவடை செய்ய வாய்ப்புள்ளது.
- இதனை தண்ணீர் தேங்காத இடங்களில் பயிர் செய்யலாம்.
- நுண்ணிய பாசன முறையில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் பாசன முறையிலும் பயிர் செய்ய முடியும்.
- மேலும் 365 நாள்களும் புதினா சாகுபடியால் வேலைவாய்ப்பினை பெருக்கலாம்.
- புதினாவின் இலையைக் கொண்டு நீர் ஆவி மூலம் எண்ணை தயாரிக்க முடியும்
எனத் தெரிவித்தார். நன்றி:தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thank you sir….i will try….