மானாவாரியில் கொத்துமல்லி சாகுபடி

மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

  • இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
  • வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.

 விதைப்பு:

  • நிலத்தை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிருக்கு பாத்திகள் அமைத்தும், மானாவாரிப் பயிரை விதை விதைப்பான் மூலமும் வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும்.
  •  விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும்.
  • இறவையில் ஹெக்டேருக்கு 10 முதல் 12 கிலோ கொத்தமல்லி விதை தேவை.
  • விதைகளை மானாவாரியாக விதைத்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ தேவை.
  • மானாவாரியாக சாகுபடி செய்யும்போது விதைகளை தூவும் முறையில் விதைத்து, நாட்டுக் கலப்பை மூலம் மூடிவிட வேண்டும்.  

விதை நேர்த்தி:

  • மானாவாரி கொத்து மல்லி விதைகளை பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்த நீரில் 16 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால் வறட்சியை தாக்குப் பிடித்து வளரும்.ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் மருந்து கலந்து ஊற வைத்து விதைப்பது சிறந்தது.
  •  பின்னர் ஒரு ஹெக்டர் விதைக்கு 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் டிரைக்கோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
  • பிறகு உலர்த்தி விதைத்தால் வாடல் நோய் வராது.

 நீர்ப்பாசனம்:

  • விதைத்த 8 முதல் 15-வது நாளில் விதை முளைக்க தொடங்கும்.
  • எனவே விதைத்தும் ஒரு முறையும், பிறகு 3-ம் நாள் ஒரு முறையும், 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

உர நிர்வாகம்:

  • கடைசி உழவின்போது ஒரு ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்.
  • சூப்பர் பாஸ்பேட் உரம் ஹெக்டேருக்கு 188 கிலோ இட்டு கொக்கி கலப்பை மூலம் கடைசி உழவு செய்ய வேண்டும்.
  • இறவை பயிருக்கு மேல் உரமாக விதைத்த 30-ம் நாளில் ஹெக்டேருக்கு 22 கிலோ யூரியா இட வேண்டும்.
  • களைகள் முளைக்கும் முன்பு புளுக்ளோரலின் ஹெக்டேருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும்.

 அறுவடை:

  • விதைத்த 30-ம் நாளில் இளங்கீரையாகவும், 60 மற்றும் 75-ம் நாள்களில் 50 சதவீதம் இலைகளையும் அறுவடை செய்யலாம்.

 விதை அறுவடை :

  • விதைத்த 90 முதல் 110 நாள்களுக்குள் விதைகளை அறுவடை செய்ய முடியும். காய்கள் நன்கு முதிர்ந்து பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும்போது அறுவடை செய்வது நல்லது.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *