தண்ணீரை தூய்மை செய்யும் தேற்றாங்கொட்டை!

கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும். தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும், இந்நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப்படுகிறது.
தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை  பின்பற்றப் படுகிறது. பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். (இதற்கு கதகப் பொடி என்ற பொடியை வடமொழி நூல்கள் குறிப்பிடப்படுகிறது.)
ஆப்பிரிக்க நாடுகளில் முருங்கைக் காய்க்குள் இருக்கும் விதைகளைப் பயன்படுத்தி தண்ணீரை தூய்மை செய்தனர்.
பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத்  தேய்த்துத் தூய்மை செய்வர்.
பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது  மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டும். இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி  விடுவார்கள்.
கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில் நீரைத் தெளியவைக்க சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும்.
நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு  இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.
இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும்  என்று கூறப்பட்டுள்ளது.
கோடையில் தண்ணீரில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கவும் இதை முயற்சி செய்யலாம்: இதை செய்வதற்கு மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம், தேத்தாங்கொட்டை 1, வெட்டி வேர் சிறிது, வெந்தயம் 20 கிராம், இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு  பயன்படுத்தலாம். மண் பானையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த குடிநீர், உயிர் சத்துக்கள் நிறைந்த உயிரோட்டமுள்ள நீராக மாறி  பயன்கள் தரும்.
நன்றி: Webdunia

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *