நம் நாட்டுக்குள் இருக்கும் பிளாஸ்ட்டிக் குப்பையை எப்படி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கும் போது நம் நாடு இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்ய வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது வெளியே வந்து உள்ளது !!
அரசு தகவல் படி நம் நாட்டில் தினமும் 15432 டன் பிளாஸ்ட்டிக் குப்பை உருவாக்க படுகிறது. இதில் அரசு தகவல் படி 6000 டன் மட்டுமே சேகரிக்க படுகிறது (மீதி எல்லாம் அங்கங்கே கிடக்கிறது). இதை தகவல்களையும் நம்மால் முழுமையாக நம்ப முடியாது
இந்த லட்சணத்தில் 2016-2017 ஆண்டில் 12000 டன் PET பிளாஸ்டிக் அமெரிக்கா ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்ய இறக்குமதி செய்த்துள்ளோம்!
இந்த வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு குப்பைகளை மூன்றாம் உலக நாடுகள் வாங்கி கொள்ள கட்டாய படுத்திக்கிறது. போன வருடம் வரை சீனாவும் இப்படி இறக்குமதி செய்ய கட்டாயபடித்த பட்டது. இப்போது முடியாது என்று சொல்லி விட்டது.
இதனால் கப்பல் முழுவதும் கோக் பெப்சி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்கா இந்தியா என்று செல்கின்றன. நம் நாடும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்