கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம்

கோடை விடுமுறை வந்தால் போதும். எல்லோரும் மலை பகுதி பார்த்து ஓடுகின்றோம். நம்மில் எவ்வளவு பேர் மலை பகுதிகளிலும் காடுகளிலும் குப்பையை போடாமல் அழகு கெடாமல் சென்று வருகிறோம்? தினமணியில் வந்துள்ள ஒரு செய்தி – கொடைக்கானலில் சுற்றுலா சீசன் முடிந்தவுடன் அங்கே உள்ள குப்பை பற்றி..
கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் முகாமில் பள்ளி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக சீசன் நிலவி வந்த வேளையில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேவையில்லா பொருள்களை வனப்பகுதிகளில் விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் வனப் பகுதி மாசுபடியாமல் இருக்க வனத்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்  வனப்பகுதிகளில் குப்பைகள் அகற்றும் முகாமில் ஈடுபட்டனர்.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *