பூமியில் எங்கும் இல்லாத அள வுக்கு நியூசிலாந்து சிலி இடையே தெற்கு பசிபிக் கடலில் உள்ள தனித் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பது ஆய்வாளர்களைக் கவலை அடைய வைத்துள்ளது.
தெற்கு பசிபிக் கடலில் ஆய்வு நடத்துவதற்காக ஆய்வு குழு வினர் சென்றுள்ளனர். அப்போது யுனெஸ்கோவால் உலக புராதன பகுதியாக அறிவிக்கப்பட்ட ஹெண்டர்சன் தீவில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருப் பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
நியூசிலாந்துக்கும், சிலிக்கும் இடையே உள்ள இந்த தீவில் விளையாட்டு பொம்மைகள், பல் துலக்கும் பிரஷ் உள்பட பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.
இந்த தீவுகளை அடைய நீங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடலில் பயணித்தால் அத்வனத்தில் இந்த தீவுகளை அடையாளம். இப்படி ஒரு தூரத்தில் உள்ள தீவிலே இப்படி மனிதனால் பிளாஸ்டிக் குப்பை கடல் மூலம் அடைகிறது என்றால், மற்ற இடங்களை பற்றி என்ன சொல்ல?
இந்த பூமியில் எங்கும் இல்லாத அளவுக்கு ஹெண்டர்சன் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது மிகவும் ஆபத்தானது என்கிறார் ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளரான ஜெனிபர் லாவேர்ஸ்.
கடந்த 2015-ல் லாவேர்ஸுடன் 6 ஆய்வாளர்கள் இந்த தீவில் சுமார் 3 மாதங்கள் வரை தங்கியிருந்து ஆய்வு நடத்தினர்.
இத்தனைக்கும் இந்த தீவுக்குள் பொதுமக்களோ, சுற்றுலா பயணி களோ செல்ல முடியாது. 10 ஆண்டு களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்து வதற்காக ஆய்வாளர்கள் மட்டுமே சென்று வருகின்றனர். தென் அமெரிக்காவில் இருந்து மீன்பிடி படகுகள் மூலம் கழிவுகள் கொண்டு வரப்பட்டு, இங்கு கொட்டப்பட்டிருக் கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தீவில் வாழும் 200-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால், அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதும் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்