கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும்
கோ.9
- வயது 100 நாட்கள். தானிய மகசூல் 4500 கிலோ/எக்டர்.
- தட்டை விளைச்சல் 7000கிலோ/எக்டர்.
- தானியம் வெள்ளை, மதிப்பூட்டம் பெறுவதற்கு ஏற்றது. மாவாகும் தன்மை அதிகம்.
- அதிக புரதச்சத்து கொண்டது.
கோ.13
- வயது 105 நாட்கள்.
- மகசூல் 3500 கிலோ/எக்டர். தட்டை விளைச்சல்.10,000 கிலோ/எக்டர். வறட்சியைத் தாங்க வல்லது.
- மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது.
கோ (ரா) 14
- வயது 105-110 நாட்கள்.
- மகசூல் 2774 கிலோ/எக்டர். தட்டை – 8428 கிலோ/எக்டர்.
- அதிக புரதம், சுண்ணாம்பு சத்து உடையது. குலைநோய்க்கு சகிப்புத் தன்மை உடையது.
- மானாவாரி இறவைக்கு ஏற்றது.
கே.7
- வயது 95-100 நாட்கள்.
- தானிய மகசூல் 3130 கிலோ/எக்டர். தட்டை – 5150 கிலோ/எக்டர்.
- மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
டி.ஆர்.ஒய்.1
- வயது 102 நாட்கள்.
- மகசூல் 4011 கிலோ/ எக்டர். தட்டை மகசூல் 6800 கிலோ/எக்டர்.
- களர், உவர் நிலத்திற்கு ஏற்றது.
பையூர்.1
- வயது 115 நாட்கள்.
- தானிய மகசூல் 3125 கிலோ/எக்டர். தட்டை – 5750 கிலோ.
- வறட்சியைத் தாங்க வல்லது.
- நீண்ட விரல் ரகம்.
- மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
பையூர் (ரா) 2
- வயது 115 நாட்கள்.
- மகசூல் 3150 கிலோ/எக்டர். தட்டை – 6000-7000 கிலோ/எக்டர்.
- சாயாத தன்மை.
- குலைநோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்