‘வாடல் நோய் அறிகுறிகள்:
- வாடல் நோயானது ஐந்து வயதுக்கு மேற்பட்ட மரங்களில் தோன்றுகிறது.
- இதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
- பின் இலைகள் பழுத்து கீழே உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட கொய்யா மரங்களில் இருந்து புது தளிர்கள் மற்றும் பூக்கள் தோன்றாது.
- பாதிக்கப்பட்ட மரங்களில் இருந்து தோன்றும் காய்கள் சிறியதாகவும் கல் போன்று கடினமானதாகவும் இருக்கும்.
- வேர் பகுதி அழுகியும், பட்டைகள் எளிதாக உறிந்து விடும் நிலையில் காணப்படும்.
- முற்றிய நிலையில் மரக்கிளைகளில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.மரம் முழுவதும் வாடி இறந்து விடும்.
வாடல் நோய் மேலாண்மை:
- களைச் செடிகளை அப்புறப்படுத்தி வயல் வெளிகள், சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
- தேவையான உரம் மற்றும் நீர் அளித்து மரத்தை வீரியத்துடன் பராமரிக்க வேண்டும்.
- வாடல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் ‘கார்பன்டசிம்’ மருந்தை கலந்து நோய் தாக்கிய மரத்தின் துாரை சுற்றி வேர்ப்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்றி வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.
– பேராசிரியர் ம.குணசேகரன்,தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்,ஸ்ரீவில்லிப்புத்துார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்