கொய்யா சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பம்

நாட்டின் மிக முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றானது கொய்யா. குறிப்பாக ஏப்- மே மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் ஆகிய இரண்டு பருவ காலங்களில் கொய்யா அறுவடைக்குத் தயாராகி அதிகளவு விற்பனைக்கு வரும். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்யா பழங்கள் மகசூல் அளவில் அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றின் தரம் குறைவாகக் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில் பழ சந்தையின் சந்தை தேவையை கருத்தில் கொண்டு கொய்யா உற்பத்தியைப் பெருக்க மேற்குவங்க கொய்யா விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள் பங்களிப்புடன் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் வாயிலாக பயிரிட்டு அதிகளவு லாபம் பெற்று வருகின்றனர்.  புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீண் தெரிவித்தது:

  • கொய்யாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி இப்போது அதிகளவு தரத்துடன், அதிக மகசூல் பெறும் வண்ணம் இப்புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இப்புதிய தொழில்நுட்பத்தில் கொய்யா மரத்தின் கிளைகள் வளைக்கப்படுகின்றன.
  •  பூக்கும் காலத்துக்கு முன்பு 5-60 நாட்களுக்கு முன்பாக கொய்யா மரத்தின் கிளைகள் வளைக்கப்பட்டு மரத்தை உள்ளே நோக்கி கட்டப்படுகிறது.
  • இதன் வாயிலாக நல்ல சூரிய ஒளி, காற்றோட்டம் மரத்துக்கு கிடைப்பதுடன் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இவ்வாறு கிளைகளை வளைத்து கட்டிய பின்பு சிறிய கிளைகள் மற்றும் இலைகளை விவசாயிகள் அகற்றிவிட வேண்டும்.
  • சுமார் 30 நாளில் வளைக்கப்பட்ட கிளைகளில் இருந்து புதிய துளிர்கள் வெளிவர துவங்கும், பின்னர் வளைக்கப்பட்ட கிளைகள் விடுவிக்கப்பட்டதுடன் 25 முதல் 40 சதவீதம் வரை அதிகளவு பூக்களை மரத்தில் காணமுடியும்
  • இதை முந்தைய கோடை மற்றும் பிந்தைய இலை உதிர்காலத்தில் காணப்படுவதுடன் விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரை அதிகளவு மகசூல் கிடைக்கிறது.
  •  இப்புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் கொய்யாவின் 3-வது ஆண்டு முதல் 8-வது ஆண்டு வரை கடைபிடிக்கலாம்.
  • மேலும் நீண்ட வயதுடைய மரங்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும் இத்தொழில்நுட்பத்தை முன்பு செயல்படுத்தவில்லை என்றால் செயல்படுத்த முயன்று பார்க்கலாம்.

நடைமுறைபடுத்தும் காலம்:

  • கொய்யா மரங்களை கோடை காலத்தில் வளைத்தால் இலை உதிர்காலம் மற்றும் குளிர் காலத்தில் அதிகளவு பழங்கள் கொடுக்கும், கோடையில் வளைக்கும்போது அதிகளவு கிளைகள், புதிய இலைகள் காணப்படும்.
  • இலைஉதிர் காலத்தை விட பூ மற்றும் காய் உருவாக்கம் குறைவாகக் காணப்படும்.
  • இலை உதிர் காலத்தில் வளைக்க அக்டோபர் மாதம் உகந்தது. இதன் வாயிலாக அதிகளவு பழங்களை கோடை பருவத்தில் நாம் பெற முடியும்,
  • இலைஉதிர் கால வளைத்தல் வாயிலாக புதிய கிளைகள், பூக்கும் திறன், காய்க்கும் திறன் மற்றும் பழத்தின் எடை அதிகரித்து வேளாண் சந்தையில் நல்ல விற்பனை விலை கிடைக்கும்.

புதிய தோட்டக்கலை தொழில்நுட்பத்தின் பயன்கள்:

  • சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது
  • குறைந்த செலவில், தொழில்நுட்பத்தில் செயல்படுத்த முடியும
  • விலைஉயர்ந்த வளர்ச்சி ஊக்கிகளைவிட விவசாயிகளுக்கு நல்ல பொருளாதார பயன்களை பெற்றுத் தரும்

எனவே கொய்யா சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகள் இப்புதிய தோட்டக்கலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்குவங்க விவசாயிகள் போன்று அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீண்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *