திண்டுக்கல் பலக்கனூத்து விவசாயி என்.மணிவேல் தோட்டத்தில் சத்துக்கள் மிகுந்த செங்கொய்யா ஊடுபயிராக வளர்க்கப்படுகிறது.இந்த கொய்யா ஒடிசா மாநிலத்தில் அதிகம் விளைகிறது.
அனைத்து தட்பவெப்பநிலைகளிலும் வளரும். சாதாரண கொய்யா 3 ஆண்டுகளுக்கு பின் காய்க்கும்.

செங்கொய்யா ஒன்றரை ஆண்டுகளிலேயே காய்க்கும். செடிகளின் தண்டு, கிளை, இலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கருஞ்சிவப்பாக (வைலட்) உள்ளன.
காய், பழங்களும் அதேநிறத்தில் உள்ளன.ஒவ்வொரு செடியும் 4 அடி உயரமே உள்ளது.
இதனால் பழங்களை எளிதில் பறிக்கலாம். சாதாரண கொய்யாவை விட சுவையும், சத்துக்களும் மிகுதியாக உள்ளன.விவசாயி கூறுகையில், ” செங்கொய்யாவை தோட்டத்தில் ஊடுபயிராக ஆங்காங்கே வளர்க்கிறேன். இவற்றை சாதாரண கொய்யா போன்று சாகுபடி செய்யலாம். ஒட்டுமுறையில் கொய்யா கன்றுகளை உருவாக்குகிறோம். இவை தோற்றத்தில் அழகாக இருப்பதால் வீட்டு தோட்டங்களுக்கு வாங்கி செல்கின்றனர். ஒரு செடி ரூ.50 க்கு விற்கிறோம்,” என்றார். தொடர்புக்கு 99449 67444.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்